/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுார் குளத்திற்கு நீரை திருப்பிட ஆற்றினுள் கரை கட்டிய விவசாயிகள்
/
அய்யலுார் குளத்திற்கு நீரை திருப்பிட ஆற்றினுள் கரை கட்டிய விவசாயிகள்
அய்யலுார் குளத்திற்கு நீரை திருப்பிட ஆற்றினுள் கரை கட்டிய விவசாயிகள்
அய்யலுார் குளத்திற்கு நீரை திருப்பிட ஆற்றினுள் கரை கட்டிய விவசாயிகள்
ADDED : டிச 18, 2024 06:06 AM

வடமதுரை : அய்யலுார் தும்மனிக்குளத்திற்கு வரட்டாற்று நீரை திருப்பி நிரப்பும் நோக்கில் ஆற்றின் குறுக்கே மண் நிரப்பி ஆயக்கட்டு விவசாயிகள் கரை கட்டி உள்ளனர்.
அய்யலுார் கோம்பை, புத்துார் மலைகளில் உருவாகும் இரு காட்டாறுகள் அய்யலுார் கெங்கையூரில் ஒன்று சேர்ந்து குரும்பபட்டி, மோர்பட்டி வழியே குடகனாற்றில் சேர்கின்றன.
இவ்விரு ஆறுகள் ஒன்று சேரும் கெங்கையூரில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து தும்மனிக்குளத்திற்கு நீர் கொண்டு செல்லப்படும். ஆனால் தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால் இயற்கையாக நீர் செல்வதில்லை.
இதனால் நீர்வரத்து வேகம் குறைந்ததும் மேலும் சில அடி உயரத்திற்கு கரை எழுப்பினால் மட்டுமே குளத்திற்கு நீர் கொண்டு செல்ல முடியும்.
இப்பணியை அரசு துறைகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்னர் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனாலும் உடனடியாக பணி செய்ய அரசு துறைகள் முன்வரவில்லை.
தற்போது கோம்பை ஆற்றில் மட்டும் சிறிதளவு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்தும் நிற்கும் முன்னர் பணி நடந்தால் மட்டுமே பலன் என்பதால் ஆயக்கட்டு விவசாயிகளே சொந்த முயற்சியில் ஆற்றின் நடுவே உயரமான கரை கட்டி நீரை திருப்பும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.