/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இழப்பீடு வழங்கவில்லை... பயிர்கடன் தருவதில்லை; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
இழப்பீடு வழங்கவில்லை... பயிர்கடன் தருவதில்லை; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
இழப்பீடு வழங்கவில்லை... பயிர்கடன் தருவதில்லை; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
இழப்பீடு வழங்கவில்லை... பயிர்கடன் தருவதில்லை; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : ஆக 23, 2025 04:58 AM

திண்டுக்கல் : இழப்பீடு தொகை வழங்கவில்லை, பயிர்கடன் தருவதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பலர் முறையிட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் கலந்து கொண்டனர்.
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் உழுவதற்கு கலப்பை, கொக்கி கலப்பைகள் வழங்க வேண்டும், வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் வாடகை நிர்ணையத்தொகை ரூ.500 ஆககுறைக்க வேண்டும்,
மின்சார துறையின் சார்பில் பவர்கிரிட் அமைப்பதற்கு நிலம் பெறப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 60 க்கு மேற்பட்ட விவசாயிகள் மனுக்கள் அளித்தனர்.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகள் விவாதம் விவசாயிகள் : செம்பட்டி நிலக்கோட்டை இடையேயான பகுதிகள் விவசாய பூமியாக இருந்தும் தண்ணீர் பிரச்னையால் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். குறிப்பாக நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் இருந்து வீணாகும் தண்ணீர் எங்கள் பகுதிக்கு கால்வாய் மூலம் எடுத்து வருவதற்கான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கலெக்டர் : நீர் வரத்துக்கான சாத்திய கூறுகள் இருந்தால் அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவேல், தங்கம்மாபட்டி: தங்கம்மாள் குளத்தை துார் வாரி அதன் மதகுகளை சரி செய்ய வேண்டும். கால்நடை விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்.
கலெக்டர்: தற்போது பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
வேடசந்துார் பகுதி விவசாயிகள் : கொடகனாற்றின் இருபுறங்களிலும் சீமைகருவேல மரங்கள் புதராக வளர்ந்துள்ளன.சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் , சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கலெக்டர்: சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியசாமி , வேடசந்துார் : தேவிநாயக்கன்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் பயிர் கடன் வழங்க மறுக்கின்றனர்.
ராமர், வத்தலகுண்டு : விருவீடு பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை
கலெக்டர் : இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மனோகரன், கொடைக்கானல் : பூண்டி பகுதியில் தனியார் இடங்களில் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
கலெக்டர்: விசாரணை செய்யப்படும்.
செல்வம், நிலக்கோட்டை : மஞ்சளாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மஞ்சளாறு அணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழகியண்ணன், சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாத்திமா ராஜரத்தினம் (விவசாய சங்க நிர்வாகி) : விவசாய விளைப் பொருள்களுக்கு உற்பத்தி செலவு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக தேங்காய் கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.200ஆக விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
ஜோசப் (பஞ்சம்பட்டி ) : திண்டுக்கல்லையொட்டி வெள்ளேடு சிறுநாயக்கன்பட்டி குளம், பெரியகுளம் உள்ளிட்டவற்றில் அதிகளவில் மண் அள்ள மிகவும் பள்ளமாகி உள்ளது. குளங்களை மீட்டெடுத்தால் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை உள்ளது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.