/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரிந்த பீட்ரூட் விலையால் விரக்தியில் விவசாயிகள்
/
சரிந்த பீட்ரூட் விலையால் விரக்தியில் விவசாயிகள்
ADDED : ஜன 20, 2025 05:50 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி, பாவாயூர், வெரியப்பூர், பொருளூர், கொல்லப்பட்டி சுற்றிய பகுதிகளில் அதிக நிலப்பரப்பில் பீட்ரூட் நடவு செய்யப்பட்டது.
பல இடங்களில் பீட்ரூட் அறுவடை மும்முரம் அடைந்த நிலையில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தது. சில நாட்களாக பீட்ரூட் விலை வீழ்ச்சியடைகிறது. ஜன.5 ல் ஒரு கிலோ பீட்ரூட் ரூ.43க்கு விற்றது. 2 வாரங்கள் கழித்து கிலோவுக்கு ரூ.25 குறைந்து தற்போது ரூ.18 க்கு விற்பனையாகிறது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதால் கட்டுப்படியான விலை கிடைக்காது. பீட்ரூட் விதை, நடவு கூலி, களையெடுத்தல் உரம், பூச்சி மருந்து, அறுவடை கூலி என ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் விற்கும் விலையானது கட்டுபடியானதாக இல்லை. ஒரு கிலோ பீட்ரூட் ரூ.20 க்கு மேல் விற்றால் மட்டுமே செலவு செய்த பணம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.