/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விரக்தியில் விவசாயிகள் : தென்னையில் பரவுகிறது காண்டாமிருக வண்டு: தடுப்பு நடவடிக்கைக்கு வழியின்றி பரிதவிப்பு

ADDED : ஜூலை 19, 2025 02:55 AM

மாவட்டத்தில் நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்துார் தாலுகாக்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை சாகுபடி நடக்கிறது. பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் தென்னை சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டதால் மற்ற மாவட்டங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகமாக தேவைப்படுகிறது.
இதனால் ஆறு மாதங்களுக்கு மேலாக தேங்காய் விலை உயர்ந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு தேங்காய் ஒன்றுக்கு ரூ.35க்கு அதிகமாக விலை போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் பாரம்பரிய நோய் தாக்கமான சிலந்தி தாக்கம், தென்னம் பிள்ளைகளை காண்டாமிருக, கூன் வண்டு தாக்குதல் அதிகம் உள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு வழியின்றி விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
நோய் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கு தோட்டக்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பாகஉள்ளது.
தோட்டக்கலை அதிகாரி அறிவுரை
பாலகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர், வத்தலக்குண்டு: ஜூன் முதல் செப்டம்பர் வரை காண்டாமிருக வண்டு தாக்குதல் அதிகமாக காணப்படும். இது 10 முதல் 15 சதவீதம் வரை பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னையின் குருத்துப் பகுதியில் துளையிட்டு வளரும் மொட்டுக்களை தின்று விடுகிறது. பாதிப்படைந்த மரங்களில் மட்டைகள் பாளைகளில் ஓட்டை விழுந்திருப்பது இதன் அறிகுறியாகும்.
இதனை கட்டுப்படுத்த எரு குழியில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும். வேப்பங்கொட்டை 50 கிராம் ,குருணை மருந்து 250 கிராம் ஆகியவற்றை 100 கிராம் ஆற்று மணலுடன் கலந்து குருத்துப் பகுதியில் துாவ வேண்டும். இளம் கன்றுகளில் மட்டைகளின் இடுக்குகளில் மூன்று நாப்தலின் உருண்டைகளை வைக்கலாம்.
கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண், பெண் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம். கவர்ச்சி பொறிகளை தனி மரத்தில் கட்ட வேண்டும். வண்டுகள் சேதப்படுத்திய குருத்துப் பகுதியில் கம்பியை உட்புகுத்தி வண்டுகளை அழிக்க வேண்டும்.