/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை சரிந்த வெண்டை; விரக்தியில் விவசாயிகள்
/
விலை சரிந்த வெண்டை; விரக்தியில் விவசாயிகள்
ADDED : செப் 20, 2024 06:13 AM

ஒட்டன்சத்திரம் : ஓணத்தை முன்னிட்டு கிலோ ரூ. 40க்கு விற்ற வெண்டைக்காய் விலை சரிவடைந்து நேற்று கிலோ ரூ.5 க்கு விற்றதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார் சுற்றிய பகுதிகளில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.
ஓணத்திற்காக கேரள வியாபாரிகள் வெண்டைக்காயை அதிகம் வாங்குவது வழக்கம். இதனையொட்டி ஓணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காயை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு கிலோ வெண்டைக்காய் அதிகபட்சமாக ரூ.40 க்கு விற்பனைஆனது.
ஓணம் முடிந்து மூன்று நாட்கள் வரை கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளை கொள்முதல் செய்ய மாட்டார்கள் யுன்பதால் வெண்டைக்காய் விலை சரிவடைந்து நேற்று கிலோ ரூ.5 க்கு விற்பனையானது. இந்த விலையானது வெண்டைக்காயை பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், '' ஓணம் முடிந்து மூன்று நாட்கள் வரை கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வர மாட்டார்கள் என்பதால் விலை குறைந்துள்ளது'' என்றார்.