/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த ஷட்டர், செடிகளுடன் வரத்துக்கால்வாய் காவேரியம்மாபட்டி பெரியகுளம் விவசாயிகள் குமுறல்
/
சேதமடைந்த ஷட்டர், செடிகளுடன் வரத்துக்கால்வாய் காவேரியம்மாபட்டி பெரியகுளம் விவசாயிகள் குமுறல்
சேதமடைந்த ஷட்டர், செடிகளுடன் வரத்துக்கால்வாய் காவேரியம்மாபட்டி பெரியகுளம் விவசாயிகள் குமுறல்
சேதமடைந்த ஷட்டர், செடிகளுடன் வரத்துக்கால்வாய் காவேரியம்மாபட்டி பெரியகுளம் விவசாயிகள் குமுறல்
ADDED : ஆக 15, 2025 02:28 AM

ஒட்டன்சத்திரம்: காவேரியம்மாபட்டி பெரியகுளத்திற்கு நீரை கொண்டு சேர்க்கும் வரத்து கால்வாயில் செடிகள் முளைத்துள்ளதோடு, ஷட்டரும் பழுதாகி உள்ளதாக காவேரியம்மாபட்டி பெரியகுளம் விவசாயிகள் குமுறுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காவேரியம்மாபட்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பெருங்குளம் உள்ளது. பல ஏக்கரில் இக்குளம் விரிவடைந்துள்ள நிலையில் குளம் நிரம்பும்போது குளத்தைச் சுற்றி உள்ள பல கிணறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படுகிறது. இதனைக் கொண்டு நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் நடந்து வருகிறது. பரப்பலாறு அணை தண்ணீர் குளத்திற்கு நேரடியாக செல்வதில்லை. விருப்பாச்சி பெருமாள் குளம் நிரம்பி மறுகால் செல்லும் நீர்தான் இக்குளத்தின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். பெருமாள் குளத்தில் மறுகால் செல்லும் நீர் ஓட்டக்குளம் , பாப்பன்குளம் நிரம்பி பெரியகுளத்தை அடைகிறது. பெருமாள்குளத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் பயணித்துதான் இங்கு நீர் வந்து சேர வேண்டி உள்ளது. நீர் வரத்து கால்வாய்களில் ஆங்காங்கே புல் பூண்டுகள் முளைத்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் பெருமாள் குளத்தில் இருந்து தண்ணீர் மறுகால் சென்று குளத்தை அடைவதற்கு பல நாட்கள் ஆகிறது.
இப்பகுதி விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறை தாங்களே களத்தில் இறங்கி நீ வழி பாதையை சரி செய்வது வழக்கம். நீர்வழிப் பாதையின் இரண்டு கரைகளையும் சிமென்ட் கலவை கொண்டு கட்டினால் மட்டுமே தண்ணீர் வீணாகாமல் விரைவில் குளத்தை அடையும்.
இதோடு குளம், குளக்கரைகளில் முளைத்துள்ள செடிகள், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இதுமட்டுமன்றி நீர் நிரம்பி வெளியேறும் பகுதியில் உள்ள ஷட்டரும் பழுதடைந்து உள்ளதால் இதனையும் சரிசெய்ய வேண்டும்.
கால்வாயை சீரமையுங்க ஹரிஹரன், விவசாயி: பெருமாள் குளத்தில் இருந்து ஒட்டக்குளம், பாப்பான்குளம் வரும் நீர் வழிப் பாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்தி தர வேண்டும். தண்ணீர் வீணாகாமல் இருக்க கரை பகுதிகளை சிமென்ட் கொண்டு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பரப்பலாறு அணை தண்ணீர் இப்புறத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஷட்டரை சரி செய்யுங்க மூர்த்தி விவசாயி : பெரியகுளம் கிழக்குப் பகுதியில் உள்ள ஷட்டர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஷட்டரை இயக்கும் பகுதி சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்தால்தான் அவசர காலத்திற்கு பயன்படுத்த முடியும். குளத்தின் சில இடங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும். கிழக்கு கரையில் இருந்து தண்ணீர் கசிவதை தடுக்க கரைகளை பலப்படுத்த வேண்டும்.