/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்
/
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்
ADDED : அக் 30, 2025 04:21 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் மலைவாழை உள்ளிட்ட மலைத்தோட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
ஒரு மாதமாக இரண்டு காட்டு யானைகள் தாண்டிக்குடி ,பண்ணைக்காடு எதிரொலிப் பாறை, கொடலங்காடு, காமனுார் பகுதிகளில் முகாமிட்டு மலைவாழைகளை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் கானல்அடி, தலைக்காடு பெருங்கானல் பகுதி விளைநிலங்களில் மலை வாழை, ஏலக்காய், தோட்ட குடிசைகள் ,விவசாய தளவாட பொருட்கள், பாசன பைப் லைன்களை சேதப்படுத்தியது.
சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்ட பந்தல் காய்கறி பந்தல்களையும் சேதப்படுத்தியதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். அவ்வப்போது வனத்துறை யானைகளை விரட்ட வெடிகளை வெடிக்க செய்த போதும் அவை வனப்பகுதியில் இருந்து சிறிது நேரம் சென்று மீண்டும் பட்டா நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில்,'' தாண்டிக்குடி பகுதியில் உள்ள யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சேதப்படுத்தும் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. யானைகளை வேறு இடத்திற்கு இடம் பெயர செய்யும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து குழுவாக ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.

