ADDED : மே 08, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழநியில் நில உரிமைப் போராட்டம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னத்துரை தலைமை வகித்தார். பருத்தியூர், புளியம்பட்டி, தொப்பம்பட்டி, வாகரை, வேலம்பட்டி பகுதிகளில் நிலமற்ற ஏழைகளுக்கு உபரி நிலங்களை வழங்கக்கோரி வலியுறுத்தப்பட்டது. மாநிலச் செயலாளர் அருள் செல்வம், மாவட்ட தலைவர் வசந்தா மணி கலந்து கொண்டனர்.