/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் அதிகாரிகளை நம்பாமல் வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்
/
'கொடை'யில் அதிகாரிகளை நம்பாமல் வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்
'கொடை'யில் அதிகாரிகளை நம்பாமல் வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்
'கொடை'யில் அதிகாரிகளை நம்பாமல் வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்
ADDED : டிச 27, 2024 05:27 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகாரிகளை நம்பாமல் விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாசன வாய்க்காலை சீரமைத்தனர்.
கொடைக்கானல் மன்னவனுார் பகுதியில் உள்ள சந்தனப்பாறை பாசன வாய்க்கால் பேரிஜம் ஏரி மன்னவனுார் இடையே உருவாகுகிறது.
இதன் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மன்னவனுார் ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாய்க்காலை சீரமைக்க கோரி பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஆண்டுதோறும் விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்களே தங்களுக்குள் பணம் வசூலித்து தங்களது ஒரு வார உழைப்பை இந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணிக்காக ஈடுபட்டனர்.
கடந்த வாரம் முதல் இப்பணியை ஏராளமான விவசாயிகள் செய்கின்றனர்.
தற்போது பெய்த கன மழையின் போது 12 கி.மீ., தொலைவில் உள்ள இந்த வாய்க்கால் துார்ந்து போய் புதர் மண்டியுள்ளது. தங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் கிடைக்காத நிலையில் தற்போது கிராமத்தினர் தாங்களே இப்பணியில் ஈடுபட்டனர். வாய்க்காலை நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு தங்களுக்கு ஆண்டுதோறும் பராமரித்து கொடுக்க வேண்டும்.

