/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காயத்தை சேமிக்கும் விவசாயிகள்
/
நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காயத்தை சேமிக்கும் விவசாயிகள்
நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காயத்தை சேமிக்கும் விவசாயிகள்
நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காயத்தை சேமிக்கும் விவசாயிகள்
ADDED : ஆக 20, 2025 01:59 AM

ஒட்டன்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம் அடைந்துள்ள நிலையில் உரிய விலை கிடைக்காததால் தீபாவளியையொட்டி நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூங்கில் பட்டறைகளில் வைத்து விவசாயிகள் சேமித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம், புலியூர் நத்தம், காளாஞ்சிபட்டி, கேதையுறும்பு, முத்துநாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, மண்டவாடி, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, கப்பலப்பட்டி என மாவட்டத்தின் பல பகுதிகளில் 3 மாதங்களுக்கு முன்பு நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணி நடந்தது. தற்போது விளைந்துள்ள நிலையில் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது.
உரங்கள் விலை, நடவு , அறுவடை செய்வதற்கான கூலி உயர்ந்துள்ளதால் இந்த விலை கட்டுபடியாகது என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை மூங்கில் பட்டறைகளில் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:சின்ன வெங்காயம் நடவு கூலியாக ஒருவருக்கு ரூ.500 கொடுத்துள்ள நிலையில் தற்போது அறுவடைக்கு ரூ.350 வரை கொடுக்க வேண்டியுள்ளது.
இத்துடன் உரம், பூச்சி மருந்து விலை உயர்வு காரணமாக தற்போது விற்கும் விலை கட்டுபடியாகாது. தீபாவளி போது விலை ஏறும் என்ற நம்பிக்கையில் பட்டறைகளில் வைத்து சேமித்து வருகிறோம் என்றனர்.