நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: விவசாயப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும், விவசாயிகளுக்கு, விவசாய தொழிலாளிகளுக்கு வங்கிக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் நாகல் நகரில் தர்ணா நடந்தது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., பேசினார்.விவசாய சங்க நிர்வாகிகள் ராமசாமி, வெள்ளைச்சாமி, தொழிற்சங்கத்தை சேர்ந்த அழகர்சாமி, பாலசந்திரபோஸ், சென்றாயன் கலந்துகொண்டனர்.

