/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யன்குளத்தில் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் விவசாயிகள்
/
அய்யன்குளத்தில் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் விவசாயிகள்
அய்யன்குளத்தில் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் விவசாயிகள்
அய்யன்குளத்தில் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் விவசாயிகள்
ADDED : டிச 08, 2024 06:11 AM

ஆயக்குடி : பழநி ஆயக்குடி, பொன்னிமலை சித்தர் கோயில் கரடு பகுதி அய்யன்குளத்தில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பழநி ஆயக்குடி பொன்னிமலை சித்தர் கோயில் கரடு பகுதி அருகே அய்யன் குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் 200 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.
மேலும் ஆற்று நீர் அணை நீர் குளத்திற்கு வருவதில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாமரத்து ஓடை, மான் விழுந்தான் ஓடை, கல் ஓடை உள்ளிட்ட ஓடைகள் வழியாகவே குளத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது. இந்த ஓடை நீர் துரைமடை வழியாக குளத்தை அடைகிறது.
இக்குளத்தின் மூலம் இச் சுற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பலத்த மழை பெய்துள்ள நிலையிலும் குளம் நிறையாமல் உள்ளது.
தண்ணீர் தேங்குவதில்லை
ஆறுமுகம், பொருளாளர், அய்யங்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் : குளத்தை துார்வாரி பலகாலம் ஆகி விட்டது.
கறைகள் சேதமடைந்துள்ளன அதை பலப்படுத்த வேண்டும்.இதற்கு பொதுப்பணித்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடி பராமரத்து பணிகள் நடைபெற்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது .வரத்து கால்வாய் துரைமடை பகுதியில் உள்ள மதகில் ஒன்று பயன்படுத்த இயலாமல் உள்ளது .மற்றொரு மதகு வழியாக எப்போதும் நீர் வெளியேறி வருகிறது . இதனால் குளத்தில் தண்ணீர் தேங்குவதில்லை.
பாதையை சரி செய்ய வேண்டும்
மயில்சாமி,அய்யன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர் :அய்யன் குளத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து நீர் வெளியேற இயலாமல் பாசனத்திற்கு சிரமம் அடையும் வகையில் உள்ளது .
மரங்கள் வளர்ந்துள்ள பகுதியை சீர் செய்ய வேண்டும் . வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு நீர் வரும் பாதையை சரி செய்து தரும் பணியை பொதுப்பணி துறையினர் செய்து தர வேண்டும்.
துார் வாரலாமே
மருதமுத்து, அய்யன் குள நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர் : அய்யன் குளத்தில் தண்ணீர் வரத்தை அதிகரிக்க துார்வார வேண்டும் . வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்த வேண்டும். குளத்தின் மதகுகளை சரி செய்து வரத்து வாய்க்கால்களை துார் வார வேண்டும் என்றார்.