/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூட்டுறவு சங்கங்களில் நிதி பற்றாக்குறை தவிப்பில் விவசாயிகள்; கடன் வழங்கலை நிறுத்தி வைக்க உத்தரவு
/
கூட்டுறவு சங்கங்களில் நிதி பற்றாக்குறை தவிப்பில் விவசாயிகள்; கடன் வழங்கலை நிறுத்தி வைக்க உத்தரவு
கூட்டுறவு சங்கங்களில் நிதி பற்றாக்குறை தவிப்பில் விவசாயிகள்; கடன் வழங்கலை நிறுத்தி வைக்க உத்தரவு
கூட்டுறவு சங்கங்களில் நிதி பற்றாக்குறை தவிப்பில் விவசாயிகள்; கடன் வழங்கலை நிறுத்தி வைக்க உத்தரவு
ADDED : செப் 29, 2024 05:28 AM

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 200க்கு மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் சில சங்கங்களை தவிர மற்றவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இருப்பினும் இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குரிய பயிர் கடன், நகை கடன், ஆடு, மாடு வாங்குவதற்காக கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான அரசு நிதி உதவி திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் கடன் சங்கங்களில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிய பயனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் ஆடு, மாடுகளுக்காக கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தியும் மீண்டும் கடன் பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விசாரித்த போது நிதி பற்றாக்குறை நிலவுவதால் ஏற்கனவே கடன் பெற்ற பயனாளிகள் கடனை செலுத்தி மீண்டும் பெறுவதற்கு தடை ஏதும் இல்லை. புதிய பயனாளிகள் கடன் கேட்டால் மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டுமென வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கூட்டுறவு கடன் சங்கங்களின் இந்த நடவடிக்கையால் பல கிராமங்களில் விவசாயிகளுக்கு கடன் உதவி கிடைக்காமல் தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பருவமழை துவங்க உள்ளதால் விவசாய பணிகளை மேற்கொள்ள, நெல் பயிரிடுவதற்கு முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு கடன் பெறுவதிலும் இழுபறியாக உள்ளது.கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கூறுகையில்,' கூட்டுறவு கடன் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட டெபாசிட்டுகள் மத்திய கூட்டுறவு வங்கியை தவிர பிற வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த டெபாசிட்களை மீண்டும் மத்திய கூட்டுறவு வங்கிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை துவங்கி உள்ளது. இந்த நடவடிக்கை முடிந்ததும் கூட்டுறவு கடன் சங்கரங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும். அதன் பிறகு பயனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிக்கல் இருக்காது ' என்றனர்.