sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு  ஏமாற்றம்: விலையும் இல்லை விளைச்சலும் இல்லை

/

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு  ஏமாற்றம்: விலையும் இல்லை விளைச்சலும் இல்லை

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு  ஏமாற்றம்: விலையும் இல்லை விளைச்சலும் இல்லை

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு  ஏமாற்றம்: விலையும் இல்லை விளைச்சலும் இல்லை

3


ADDED : பிப் 26, 2026 06:23 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:23 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ரெட்டியார்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, ஸ்ரீராமபுரம் உட்பட பல இடங்களில் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்படுகிறது.

இந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மானாவாரியாக பல ஏக்கரில் மக்காச்சோளம் நடவு செய்திருந்தனர். அவ்வப்போது பெய்த சிறு மழை காரணமாக பயிர் முளைத்து கதிர்விடும் நேரத்தில் மழை பெய்யவில்லை. இதனால் மக்காச்சோளம் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணிகள் நடந்து வந்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர்.

போதிய மகசூல் கிடைக்காமல் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரிக்கும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது 100 கிலோ ரூ.2300க்கு மேல் விற்பனை ஆன நிலையில் இந்தாண்டு குறைந்தபட்சமாக ரூ.1500 க்கு விற்பனை ஆகிறது. விளைச்சல் குறைந்துள்ள போதிலும் விலையும் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us