/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகளை கொலை செய்து தந்தை தற்கொலை உறுதி
/
மகளை கொலை செய்து தந்தை தற்கொலை உறுதி
ADDED : ஆக 12, 2025 03:47 AM
ஆயக்குடி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டியில் பெண், தந்தை மர்மமரண வழக்கில் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து தந்தை தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணக்கம்பட்டி ராஜபுரம்புதூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பழனியப்பன் 53. இவரது மனைவி விஜயா 47. மகன் நல்லசாமி 25, மகள்கள் கார்த்திகா 27, தனலட்சுமி 23. இதில் தனலட்சுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் விஜயா, கார்த்திகா ஆகியோர் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்றிருந்தனர். நேற்று காலை பழனியப்பன் வீட்டிற்கு அக்கம் பக்கத்தினர் சென்றபோது அவர் துாக்கில் தொங்கிய நிலையிலும் தனலட்சுமியும் மர்மமான முறையிலும் இறந்து கிடந்தனர். தனலட்சுமிக்கு இறுதி சடங்குகள் செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன. பிரேத பரிசோதனையில் தனலட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. தந்தையே மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.