/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாதிய கொலையில் தந்தை, மகனுக்கு குண்டாஸ்
/
சாதிய கொலையில் தந்தை, மகனுக்கு குண்டாஸ்
ADDED : நவ 08, 2025 01:45 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாதி மாற்றி திருமணம் செய்த மகளின் கணவரை கொலை செய்த தந்தை, மகன் மீது குண்டர் சடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டையடுத்த ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால் கரவை தொழிலாளி ராமச்சந்திரன் 24. இவரும் கணபதிபட்டியை சேர்ந்த சந்திரன் மகள் ஆர்த்தி என்பவரும் காதலித்தனர்.
கடும் எதிர்ப்பை மீறி ஜூனில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து அக். 12 ல் ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டார்.
வேறு சாதி இளைஞர் என்பதால் கொலை செய்த பெண்ணின் தந்தை சந்திரன் 49, சகோதரர் ரிவின் 23 , கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்
பொது அமைதி, பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட வகையில் தந்தை, மகன் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்க இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

