/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாக்காளர் பட்டியல் முறைகேடால் ஆட்சியில் அமர்ந்துள்ளது : தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

ADDED : நவ 08, 2025 01:46 AM

திண்டுக்கல்: ''வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததால் தான் தி.மு.க., ஆட்சியில் அமர்ந்து உள்ளது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
திண்டுக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்த அ.தி.மு.க., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தலைமை வகித்த அவர் பேசியதாவது:
வீட்டிற்கு அஸ்திவாரம் எப்படியோ அது போல் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது மிக முக்கியமான பணியாகும்.
இதில் சரியாக செயல்பட்டாலே அ.தி.மு.க., நுாறு சதவீதம் வெற்றி எளிமையாகும்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததால் தான் தி.மு.க., ஆட்சியில் அமர்ந்து உள்ளது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை போலி வாக்காளர்களை சேர்த்து வெற்றி பெற்று உள்ளனர் என்றார்.
ஜெ., பேரவை இணை செயலாளர் கண்ணன், எம்.எல்.ஏ., தேன்மொழி, முன்னாள் எம்.பி., உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் விஜய பால முருகன், இணை செயலாளர் சந்திரா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்த னர்.
ஒன்றிய செயலாளர்கள் முருகன், யாகப்பன், ராமராசு, சுப்பிரமணி, சுதாகர், அன்ன களஞ்சியம், தாமோதரன், சண்முகசுந்தரம், மயில்சாமி, சின்னச்சாமி, சேம்பர் ஆரோக்கியசாமி, ஆர் கே சுப்பிரமணி, பேரூர் செயலாளர்கள் சக்திவேல், முத்தையா, சேகர், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா முகமது, சுகன், செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சதீஷ்குமார், அப்துல் சமது கலந்து கொண்டனர்.