/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீடுகளுக்கு மேல் செல்லும் உயரழுத்த மின் ஒயர்களால் அச்சம்
/
வீடுகளுக்கு மேல் செல்லும் உயரழுத்த மின் ஒயர்களால் அச்சம்
வீடுகளுக்கு மேல் செல்லும் உயரழுத்த மின் ஒயர்களால் அச்சம்
வீடுகளுக்கு மேல் செல்லும் உயரழுத்த மின் ஒயர்களால் அச்சம்
ADDED : மார் 06, 2024 06:29 AM

விபத்துக்கு வாய்ப்பு
திண்டுக்கல்லில் வாகனத்தில் அதிக அளவில் மூடைகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. தொங்கியபடியே செல்வதால் பின்வரும் வாகனங்கள் அச்சத்துடன் செல்கின்றன. பெரும் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. இதனை கண்காணிக்க வேண்டும். சிவக்குமார், திண்டுக்கல்.
குண்டும் குழியுமாக ரோடு
சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில் இருந்து நத்தமாடிபட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏ.ஜி.டி.அந்தோணி, கொசவபட்டி.
........--------
குப்பையை எரிப்பதால் பாதிப்பு
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டை பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் உருவாகும் புகை ரோட்டை மறைப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. -காமாட்சி ஒட்டன்சத்திரம்.
..........--------மின்ஓயர்களால் அச்சம்
நத்தம் புதுப்பட்டி நாயக்கர் தெரு பகுதியில் குடியிருப்புகளுக்கு மேல் உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் செல்கிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது .மின்வாரிய அதிகாரிகள் குடியிருப்பு மேல் செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். என்.வி. முருகன், புதுப்பட்டி.
...........-------அள்ளாப்படாத குப்பை
திண்டுக்கல் -செம்பட்டி ரோடு வக்கப்பட்டியில் பல நாட்களாக அள்ளாமல் குவிந்துள்ள குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடந்து செல்வோர் மூக்கை பிடித்து செல்கின்றனர் .கற்களும் குவிந்துள்ளது .இதை அகற்ற வேண்டும். செந்தில்குமார் , வக்கம்பட்டி.
.................--------ரோட்டில் கழிவு நீர் தேக்கம்
திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் இருந்து பெரிய பள்ளபட்டி செல்லும் ரோடு அருகே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜனனி, திண்டுக்கல்.
.............---------சிக்னல் கம்பத்தால் விபத்து
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வழியில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். சிக்னல் கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வர்ஷினி, திண்டுக்கல்.
..............---------

