sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரும்பிலே அறிவியலை ஊட்டி விஞ்ஞானத்திற்கு விதை

/

அரும்பிலே அறிவியலை ஊட்டி விஞ்ஞானத்திற்கு விதை

அரும்பிலே அறிவியலை ஊட்டி விஞ்ஞானத்திற்கு விதை

அரும்பிலே அறிவியலை ஊட்டி விஞ்ஞானத்திற்கு விதை


ADDED : மார் 02, 2024 05:37 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் -


நாள் முதலாய் நள்ளிரவு நுனிவரைதோள் கொடுத்துத் துயர் துடைக்கும்

அறிவியல் ஓர் அற்புதம்... முடியாது என்ற வார்த்தை எல்லாம் விழிமூடி பல நாளாயிற்று...அறிவியலுக்கு அடி பணிந்தாயிற்று என பார் போற்றும் அளவிற்கு அறிவியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவும் அறிவியல் மூலமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. உலகம் போற்றும் இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமனை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ல் தேசிய அறிவியல் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு டேலண்சியா - 2024 என்ற பெயரில் அறிவியல் கண்காட்சியை நடத்தியது திண்டுக்கல் ஸ்ரீ காமராஜர் மெட்ரிக்குலேஷன் பள்ளி. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களின் விஷயத்தை எடுத்துரைக்கும் வகையில் படைப்புகளும் இடம் பெற்றன.

விக்சித் பாரத்@2047 நோக்கி இந்தியா


சரவணன், பேராசிரியர், ஜி.டி.என்., கல்லுாரி : ஒளிச்சிதறலை கண்டறிந்த ராமன் நினைவாக அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பள்ளி, கல்லுாரிகளில் அறிவியல் கண்காட்சி, வினாடி-வினா போன்ற போட்டிகள் நடத்தி மாணவர்களிடம் அறிவியல் குறித்த ஊக்குவிப்பை ஏற்படுத்துகிறோம். இந்தாண்டிற்கான தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் 'விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்' என்பதாகும். விக்சித் பாரத்@2047 என்பது இந்தியா சுதந்திரம் பெற்று வரும் நுாற்றாண்டான 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே. பிரதமர் மோடி விக்சித் பாரத்@2047 எனும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இதன் பகுதியாகவே தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் அமைந்துள்ளது. இதன் மூலம் 2 முதல் 12 வயதிற்குள்தான் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியடையும்.

தனித்திறனை வெளிக்கொணரும் முயற்சி


ராமலிங்கம், பள்ளி செயலர்: இன்றைய காலச்சூழலில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டும் வரும் வகையில் அறிவியல் திறன் போட்டிகள் நடத்தபட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் அன்றாட கல்வியோடு, ஒழுக்கம், அறிவியல் திறன், அறிவியல் நுண்ணறிவு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேகமாக திட்டங்கள் கொடுக்கப்பட்டு கண்காட்சியாக்கப்பட்டுள்ளது. சர்.சி.வி. ராமன் போல் மாணவர்களும் எதிர்காலத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்குவார்கள் என்ற நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

கற்றல் திறனோடு அறிவியல் அறிவும் வளரும்


நரசிங்க சக்தி, இயக்குநர், ஓய்வு தலைமையாசிரியர் : பொதுவாக பள்ளிகளில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் குறிப்பிட்ட நபர்கள் பங்கேற்பர்.மற்றவர்கள் பார்வையிடுவர். ஆனால் காமராஜர் பள்ளியைப் பொறுத்தவரையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டுமென்ற நோக்கோடு அனைவரையும் பங்கேற்க வைத்துள்ளோம். எதிர்பார்த்ததை விட நல்ல கண்காட்சியாக அமைந்துள்ளது. பெற்றோர்களும் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டனர். இதனை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்ய வேண்டுமென நினைக்கிறோம். இது கற்றல் திறனோடு, அறிவியல் அறிவையும் வளர்க்க பயன்படும் என நம்புகிறோம்.

அனைத்து மாணவர்களும் பங்கேற்பு


லதா, பள்ளி முதல்வர் : அறிவியல் கண்காட்சியில் டேலண்சியா - 2024 என்ற தலைப்பில் சமர்ச்சீர் கல்வி சார்ந்த அறிவியில் உருவாக்கம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம். வெறும் அறிவியல் பாடம் சார்ந்து மட்டுமல்லாது தமிழ் தொடங்கி அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் தங்களை படைப்புகளை படைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக தமிழ் எடுத்துக் கொண்டால் ஐவகை நிலங்கள் குறித்து மாணவர்கள் உருவாக்கும் படைப்பு இருக்கும். அனைத்து பாடங்களுக்கும் பெற்றோர்களின் உதவியோடு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். குழந்தைகளின் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு போட்டிகளும் நடத்தி உள்ளோம்.

இதுவும் புது அனுபவமே


தன்யாஸ்ரீ, மாணவி : தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு எங்கள் பள்ளியில் நடந்த கண்காட்சியில் நாங்களே பெற்றோரின் உதவியோடு உருவாக்கிய படைப்புகளை வைத்துள்ளோம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்களே படைப்பு குறித்த விளக்கத்தையும் அளித்தோம். இது புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து பல படைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது.

ஏக்கத்துக்கு வழி இல்லை


சஹானா ஸ்ரீ, மாணவி : அறிவியல் கண்காட்சி என்றால் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் பங்கேற்பது வழக்கம். ஆனால் முற்றிலும் மாறாக பள்ளி மாணவர்கள் அனைவரையுமே ஆசிரியர்கள் பங்கேற்க வைத்தனர். இதனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் யாருக்கும் ஏற்படவில்லை. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இதை விட சிறந்த படைப்பை கொடுக்க விரும்புகிறேன்.






      Dinamalar
      Follow us