/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி- அலைபேசி, ஆவணங்கள் பறிபோனது
/
பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி- அலைபேசி, ஆவணங்கள் பறிபோனது
பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி- அலைபேசி, ஆவணங்கள் பறிபோனது
பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி- அலைபேசி, ஆவணங்கள் பறிபோனது
ADDED : ஜூன் 20, 2025 03:43 AM
திண்டுக்கல்,: திண்டுக்கல் அருகே டூவீலரில் சென்ற மாநகராட்சி பெண் கவுன்சிலர்களை   டூவீலரில் வந்து வழிமறித்த  இருவர் கைப்பையை  பறித்து சென்றனர். அதிலிருந்த  அலைபேசி, பணம்,முக்கிய ஆவணங்கள் பறிபோனது.
திண்டுக்கல் மாநகராட்சி   கவுன்சிலர்கள்  காயத்ரி ( ம.தி.மு.க.,), சுபாசினி (தி.மு.க.,). நேற்று காலை    சின்னாளப்பட்டி சென்றுவிட்டு மதியம்  திண்டுக்கல் நோக்கி டூவீலரில்  வந்தனர்.
வெள்ளோடு வண்ணத்துசின்னப்பர் கோயில் அருகே வந்தபோது முகத்தில்  கர்சிப் கட்டிக்கொண்டு டூவீலரில் வந்த  இருவர்  கவுன்சிலர்களை வழிமறித்து அவர்கள் வைத்திருந்த கைபையை  பறித்துக்கொண்டு சென்றனர்.
தாலுகா  போலீசார்   விசாரணையில்  வழிப்பறியில் ஈடுபட்டவர்கள்   வடமாநிலத்தவர்கள்    என்பது  தெரிந்தது.   அவர்கள் தப்பிச்சென்ற வழியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா  பதிவுப்படி  அவர்களை போலீசார்  தேடுகின்றனர்.  இதனிடையே  கவுன்சிலர்களிடம்  கைப்பையை  பறித்து சென்ற வழிப்பறி நபர்கள் குறித்த  வீடியோ  வைரலாகி வருகிறது .
கவுன்சிலர் காயத்ரி கூறுகையில், ''  கை பையில் முக்கியமான ஆவணங்கள், பணம்,  ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள  அலைபேசி  இருந்தது. கொஞ்சம் உஷாராக இல்லை என்றால்  அவ்வழியே வந்த பஸ் சக்கரத்தில் சிக்கி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்''என்றார்.

