/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் அதிகளவில் விளைச்சல் காணும் அத்திப்பழம்
/
கொடைக்கானலில் அதிகளவில் விளைச்சல் காணும் அத்திப்பழம்
கொடைக்கானலில் அதிகளவில் விளைச்சல் காணும் அத்திப்பழம்
கொடைக்கானலில் அதிகளவில் விளைச்சல் காணும் அத்திப்பழம்
ADDED : ஆக 13, 2025 02:12 AM

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி மலைப் பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த அத்திப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில் அதிகளவில் விளைச்சல் கண்டுள்ளது.
தாண்டிக்குடி தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் சோதனை அடிப்படையில் திம்லா அத்தி மரம் நடவு செய்யப்பட்டன. இது தற்போது நன்கு காய்க்க தொடங்கி உள்ளது. அத்தி பூத்தார் போல் என்பதற்கு இணங்க இவற்றில் பூக்கள் பூப்பதில்லை மாறாக மரங்களின் வேர் பகுதியில் இருந்து கிளைகள் வரை கொத்துக்கொத்தாக காய்கள் காய்த்து குலுங்குகின்றன.இவ்வகை அத்திப்பழத்தில் ஏராளமான நுண்ணுட்டச் சத்துக்கள் அடங்கி உள்ளன.ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பழமாக உள்ளது. பொதுவாக இவை 1300 மீட்டர் உயரமுள்ள மலைப் பாங்கான பகுதியிலும் மட்டுமே காய்க்கும் தன்மை உடையது. நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் ஏ உள்ளிட்டவை அடங்கி உள்ளன. இதன் சீசன் செப்டம்பர் வரை நீடிக்கும்.இவை தற்போது மார்க்கெட்டில் கிலோ ரூ. 150 முதல் 200 வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மலைத் தோட்ட பயிர்களில் தற்போது அத்தி மரங்களையும் ஏராளமான விவசாயிகள் நடவு செய்வது குறிப்பிடத்தக்கது.