ADDED : ஜூலை 26, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த திருட்டு நகையை திருப்பி தராத கிளை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
2023 அக்.,ல் 8.5 பவுன் நகை திருடு போனது. போலீஸ் விசாரணையில் மானுாரை சேர்ந்த நவீன் குமார் 25, கைது செய்யப்பட்டார். திருட்டு நகையை பழநியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தது தெரிந்தது. பழநி தாலுகா போலீசார் அடகு வைத்த நகையை ஒப்படைக்க கோரினர். வழங்காத நிலையில் கிளை மேலாளரான தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜை25, கைது செய்தனர்.