/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் போராட்ட ம் ஹிந்து முன்னணி மாநில செயலாளர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 26, 2025 03:51 AM
திண்டுக்கல்: ''ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதை விடுத்து தாக்குதல் சம்பவங்களை வேடிக்கை பார்த்தால் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி ஹிந்து முன்னணி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என அவ்வமைப்பின் மாநில செயலாளர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: பெருமாள் கோவில்பட்டி காளியம்மன் கோயில் விழா ஏற்பாடுகளை கமிட்டியினர் செய்தபோது போலீசார் கண் எதிரிலே பெரும்பான்மையாக வசிக்கும் கிறிஸ்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் தாக்கிய நபர்களை இன்னும் கைது செய்யவில்லை. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
ஹிந்து கோயில் முன்பாக வேற்று மதத்தினர் வரவேண்டிய தேவை என்ன.
போலீசாரின் கண்ணெதிரே இந்த சம்பவம் நடந்த நிலையிலும் கூட முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கின்றனர். சிறுபான்மையினருக்கு ஒரு ஒரு சிறிய பிரச்னை என்றாலும் அதை தேசிய அளவிலான பிரச்னையாக உருவாக்கி போராட்டம் செய்யும் அரசியல் கட்சிகள் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஏன் கண்டன குரல் எழுப்பவில்லை.
ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இதை விடுத்து தாக்குதல் சம்பவங்களை வேடிக்கை பார்த்தால் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி ஹிந்து முன்னணி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.