/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நல்லதோர் வழி காணுங்க: அணைகளுக்கு நீர்வரத்து இல்லை: 2 ம் போக நெல் சாகுபடி பாதிக்கும் அவலம்

ADDED : மார் 27, 2025 05:07 AM

மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நெல் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கு நீர் ஆதாரமான அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து வருவதில்லை. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை துவங்கிய பின் விவசாயிகள் நடவு பணியை துவங்கினால் இரண்டாம் போகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
குளத்து பாசனம் நடைபெறும் வயல்களில் குளத்தின் நீர் அளவை பொறுத்து விவசாயிகள் திட்டமிட வேண்டும்.
நேற்றைய காலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 65 அடி கொண்ட பாலாறு- பொருந்தலாறு அணையில் 42.26 அடி தண்ணீர் உள்ளது. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் இங்கிருந்து 129 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
80 அடி குதிரையாறு அணையில் 55.27 அடி தண்ணீர் உள்ளது. 8 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
66.47 அடி வரதமாநதி அணையில், 56.79 அடி தண்ணீர் உள்ளது. மூன்று கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.
இந்த அணைகளுக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.இதன் காரணமாக இரண்டாம் போக நெல் சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.