/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீர்வுக்கு வழி காணுங்க: ஆக்கிரமிப்பால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜூன் 09, 2025 02:38 AM

மாவட்டத்தில் பல நகர்களில் பைபாஸ் இருந்தும் நகர் பகுதியில் சில மாதங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது.
ஆக்கிரமிப்பு, போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால் விசேஷ நாட்கள் மட்டுமல்லாது சாதாரண நாட்களில் கூட போக்குவரத்து நெரிசலால் மக்கள் நடந்து செல்வதற்கே சிரமம்பட வேண்டி உள்ளது.
பல இடங்களில் ரோடு பணி, பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாலும் போக்குவரத்து பாதித்து நெரிசல் உருவாகிறது. இது போன்ற இடங்களில் வாகனங்கள் கடந்து செல்ல நெடும் நேரமாகிறது .
இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாது தவிக்கின்றனர். இது போன்ற நிலையை தவிர்க்க பணிகளை துரிதப்படுத்துவதோடு,ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதோடு போதிய போலீசார் நியமித்து நகர்களில் ஆங்காங்கு ஏற்படும் போக்குவரத்துநெரிசலை ஒழுங்குப்படுத்தவும் போலீஸ் துறையினர் முன் வர வேண்டும்.