/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயம் செழிக்க வழி காணுங்க 58 கிராம கால்வாயில் வைகை நீரை திறங்க உபநீர் வெளியேறுவதை உபயோகமாக்குங்க

ADDED : நவ 19, 2024 06:28 AM

வத்தலக்குண்டு: வைகை அணை உபநீர் வெளியேறுவதை உபயோகமாக்கும் வகையில் 58 கிராம கால்வாயில் திறந்து விட விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வைகை அணை தண்ணீரை உபரிநீராக ஆற்றில் வெளியேற்றும் போது அந்த நீரை உபயோகமாக பயன்படுத்த திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்ட 58 கிராமங்களுக்கு பயன்படுத்தும் படி திட்டம் உருவாகி 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. 2023ல் இத்திட்ட கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வானம் பார்த்த பூமியாக இருந்த பல நுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று புஞ்சை நிலமாக மாற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலம் வைத்திருந்தும் தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் கேரளா, திருப்பூருக்கு சென்ற விவசாயிகள் 58 கிராம கால்வாய் திட்டத்தால் மீண்டும் அவரவர் பகுதிக்கு திரும்பினர். அவரை, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போதும் உபரிநீரை 58 கிராம கால்வாயில் திறந்து விடுவதற்கு வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
....
திறந்து விடலாமே
2023 ஐ போல் இந்த ஆண்டும் தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உபரியாக செல்லும் நீரை அவ்வப்போது 58 கிராம கால்வாயில் திறந்து விட்டால் 650 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை நெருங்கிக் கொண்டு இருப்பதால் உபரி நீரை கால்வாயில் திறக்க வேண்டும்.
தங்கப்பாண்டியன், அ.தி.மு.க.,ஒன்றிய பாசறை செயலாளர், விருவீடு.