/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதற்கோர் வழி காணுங்க: 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரோடு வசதி இல்லை: ஊராட்சி கிராமங்களில் தவியாய் தவிக்கும் மக்கள்

ADDED : பிப் 13, 2025 06:08 AM

மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் கிராம தார் சாலைகள் சேதமடைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம தார் சாலைகளை புதுப்பிப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
அதே நேரத்தில் ஏதோ ஒரு ஊராட்சியில் ஒன்று அல்லது இரு சாலைகளை புதுப்பித்தாலும் புதுப்பிக்கப்பட்ட சாலைகளும் தரம் குறைந்ததாகவே உள்ளது. கிராம சாலைகளை புதுப்பிக்கும் லேயர் திக்னஸ் இல்லாமல் மேலோட்டமாக போடுவதும், ரோடு போட்ட ஒரு சில மாதங்களிலே மேடு பள்ளங்களாக மாறுவதும் கண்கூடாக தெரிகிறது.
கிராம சாலைகளை குறிப்பிட்ட அளவீடுகளின் படி தான் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு நீண்ட காலமாக உள்ளதாகவும் அது கடந்த காலங்களில் சரியாக இருந்ததாகவும், தற்போதைய வாகனப் பெருக்கங்களின் காரணமாக குறிப்பிட்ட அளவீடுகளில் அமைக்கப்படும் ரோடுகள் தாக்குப் பிடிக்க முடியாது சேதமடைவதாக ஒரு தரப்பினர் விளக்கம் கொடுக்கின்றனர்.கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்கு குறைந்தது இரண்டு மூன்று டூவீலர்கள் வைத்துள்ளனர். அதேபோல் நான்கு சக்கர வாகனங்களும், மண் அள்ளும் இயந்திரம் போன்ற கனரக வாகனங்களினாலும் ரோடுகள் சேதத்திற்கு ஆளாகின்றன. பெரும்பாலான ஊராட்சிகளில் ரோட்டோரம் பைப் லைன் பதிப்பதால் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ரோடுகள் சேதமடைகின்றன.