/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
ADDED : செப் 20, 2024 06:08 AM

குஜிலியம்பாறை : தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் சிறப்பு முகம் நடந்தது.
கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புதுரோடு நாகையகோட்டை ரேஷன் கடை,இ-சேவை மையம், கோவிலுாரில் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
வடுகம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை தூர்வாருதல் பணிகளை பார்வையிட்டார்.
டி.ஆர்.ஓ., ஷேக் முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஒ., கிஷான்குமார் பங்கேற்றனர்.