தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 ஓட்டல்களுக்கு அபராதம்

3 ஓட்டல்களுக்கு அபராதம்

3 ஓட்டல்களுக்கு அபராதம்


UPDATED : செப் 09, 2026 10:10 PM

ADDED : செப் 09, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 10:10 PM ADDED : செப் 09, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் நகரில் செயல்படும் 15 ஓட்டல்களில் சோதனை நடத்தினர்.

அப்போது தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா, ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அதோடு உணவு மாதிரிகளையும் சேகரித்தனர். அதில் 3 ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 3 ஓட்டல்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

அதேபோல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் கூடம், பயிற்சி மருத்துவர்கள் விடுதி, மருத்துவமனையில் செயல்படும் கேண்டீன் சமையலறையிலும் ஆய்வு நடத்தி உணவு மாதிரிகள் சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us