/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பை கொட்டினால் அபராதம்; திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை
/
குப்பை கொட்டினால் அபராதம்; திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை
குப்பை கொட்டினால் அபராதம்; திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை
குப்பை கொட்டினால் அபராதம்; திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : நவ 23, 2024 05:43 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் பகுதி பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தினமும் துாய்மை பணியாளர்கள் காலை,மாலை நேரங்களில் வீடுவீடாக சென்று மக்கும்,மக்காத குப்பையை சேகரிக்கின்றனர். இருந்தபோதிலும் பொது மக்கள் ரோட்டோரங்களில் குப்பையை வீசி செல்வது,துாய்மை பணியாளர்களிடம் வழங்காமல் ரோட்டோரங்களில் குவித்து வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இருந்தும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டும் கலாசாரம் குறைந்தபாடில்லை. இதை முற்றிலும் தடுத்து அவரவர் குப்பையை முறையாக துாய்மை பணியாளர்களிடம் தான் வழங்க வேண்டும்.
மீறி ரோட்டில் கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதோடு பொது இடங்களில் து குப்பையை கொட்டுவோரை கண்காணித்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க 48 வார்டுகளிலும் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.

