ADDED : மே 17, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டியில் விதிமுறை மீறி டீசல், பெட்ரோல் விற்ற கடையில் தீ பற்றியதில் ஒருவர் காயமடைந்தார்.
வில்பட்டியை சேர்ந்தவர் ஜெயவீரன் 42. வில்பட்டி நுழைவாயிலில் உள்ள வணிக வளாகத்தில் பேன்சி கடை வைத்துள்ளார். இங்கு விதிமீறி பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் கடை முழுவதும் பற்றி எரிந்தது. ஜெயவீரன் காயமடைந்தார். உள்ளூர்வாசிகள் , தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.