நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் வடமதுரை ரோட்டில் மகளிர் மேல்நிலை பள்ளி அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.
நேற்று இரவு 7:00 மணிக்கு பெட்ரோல் பங்க்கின் கூரையில் புகை கிளம்பியதுடன் தீ பொறி பறந்து கீழே விழுந்தது. இதனால் பங்க் ஊழியர்களும், பெட்ரோல் போடுவதற்காக வந்தவர்களும் உடனடியாக வெளியேறினர்.
மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேடசந்தூர் நகர் பகுதி முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீச்சி தீயை அணைத்தனர்.