/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவு மில்லில் தீ; இயந்திரங்கள் சேதம்
/
மாவு மில்லில் தீ; இயந்திரங்கள் சேதம்
ADDED : நவ 23, 2024 05:42 AM
திண்டுக்கல் ; திண்டுக்கல்லில் மின்கசிவு காரணமாக தனியார் மாவு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதமானது.
திண்டுக்கல் ஓய்.எம்.ஆர். பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்40. ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் தனியார் மாவு மில் நடத்துகிறார். இந்த மாவு மில் தீபாவளி விடுமுறை முடிந்து சில நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. ஊழியர்கள் காலை முதல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்று இரவு 8:00 மணிக்கு மில்லில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தது.
தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ரூ.3 லட்சத்திற்கு மேலாக இயந்திரங்கள் நாசமானது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

