/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை ஆயில் மில்லில் தீ விபத்து
/
வடமதுரை ஆயில் மில்லில் தீ விபத்து
ADDED : ஜன 09, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மூனாண்டிபட்டி ஆயில் மில்லில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மூனாண்டிபட்டியில் நெல் உமியில் இருந்து ஆயில் பிரித்தெடுக்கும் மில் செயல்படுகிறது. நேற்று மதியம் ஆயில் சேமிப்பு தொட்டி, கொதிகலன் இருந்த பகுதியில் குழாய் பாதையில் ஏற்பட்ட கசிவில் தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
திண்டுக்கல், வேடசந்துார் நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பல ஆயிரம் லிட்டர் ஆயில் வீணானது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.