/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒர்க் ஷாப்பில் பற்றிய தீ 20 வாகனங்கள் சேதம்
/
ஒர்க் ஷாப்பில் பற்றிய தீ 20 வாகனங்கள் சேதம்
ADDED : மார் 31, 2025 01:16 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் பழநி ரோடு கொட்டப்பட்டி பிரிவு அருகே கார் ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மினி ஆட்டோக்கள் உட்பட 20 பழைய வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் 65. இவர் பழநி ரோடு கொட்டப்பட்டி பிரிவு அருகே கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
ஒர்க் ஷாப்பின் வெளி பகுதியில் கார்கள், மினி ஆட்டோக்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று மதியம் திடீரென இங்குள்ள கார்களில் தீப்பற்றி எரிய துவங்கியது. அக்கம்பக்கத்தினர் அணைக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை. அதற்குள் தீ மளமளவென அருகிலிருக்கும் கார்களிலும் பரவியது.
தீயணைப்பு உதவி அலுவலர்கள் மயில்ராஜ், சிவக்குமார் மற்றும் குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.