/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழைய இரும்பு கடை கோடவுனில் தீ விபத்து
/
பழைய இரும்பு கடை கோடவுனில் தீ விபத்து
ADDED : மார் 04, 2026 07:05 AM

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் ஆதிலட்சுமிபுரத்தில் பழைய இரும்பு கடை கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் தீயில் கருகின.
ஆத்தூர் வேலக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சஞ்சீவி. ஆதிலட்சுமிபுரத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.
அருகே உள்ள குடோனில் பழைய இரும்பு, பிளாஸ்டிக், மரப்பொருட்கள் வைத்திருந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு கோடவுனில் தீப்பற்றியது.
மளமளவென பரவிய தீயால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது.
ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் பொருட்கள் தீயில் கருகின. செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

