/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நகை பறிப்பில் மூதாட்டியின் காது அறுந்தது
/
நகை பறிப்பில் மூதாட்டியின் காது அறுந்தது
ADDED : மார் 04, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி எல்லப்பட்டியை சேர்ந்தவர் முத்தக்காள் 65. கணவர் இறந்த நிலையில் வடமதுரை மூக்கரபிள்ளையார்கோவில் கிராமத்தில் தனது மகள் அலமேலு வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வீட்டின் கதவை சிறிது திறந்து வைத்தபடி முத்தக்காள் துாங்கினார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மூதாட்டி காதில் மாட்டலுடன் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடை பறித்து தப்பினார். இதில் அவரது காது அறுபட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

