ADDED : ஜூலை 03, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் பணி புரியும் பள்ளி சத்துணவு பெண் பணியாளர்களுக்கு தீயணைப்புத் துறை சார்பில் போலி தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் நடந்த ஒத்திகையில் பணியாளர்களுக்கு, திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைப்பது, தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றுவது மற்றும் தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டது.