ADDED : மே 30, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: எம்.வாடிப்பட்டியில் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த முரளிக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த தென்னை நார் குவியலில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கி சிறிது நேரத்தில் வேகமாக பரவியது.
நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் துறையினர் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.