ADDED : ஜன 05, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பை கொட்டப்பட்டு உள்ள இடத்தில் தீ பிடித்ததால் தென்னை மரத்தில் தீ பற்றியது.
இம்மருத்துமனை வளாகத்தில் உள்ளே குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் தென்னை மரங்கள் வளர்ந்துள்ளன. நேற்று மாலை குப்பையில் தீப்பிடித்த நிலையில் பற்றி எரிந்த தீ பரவி தென்னை மரத்தின் ஓலைகளில் பற்றிப் பரவியது.
உடனடியாக அங்கு தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் சென்று தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.

