
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஆத்துமேட்டை சேர்ந்தவர் ராஜபாண்டி 35.
வேடசந்துார் கரூர் ரோட்டில் கருக்காம்பட்டி மேம்பாலம் அருகே பழைய இரும்புக்கடை வைத்துள்ளார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு கடையில் இருந்தவர்கள் டீ சாப்பிட சென்ற போது மின் கசிவால் திடீரென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது.
கடையில் இருந்த பொருட்கள் எரிந்தன. வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.