ADDED : செப் 21, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, செப்.22-
வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் செயல்படும் கோடவுனில் பஞ்சு பேரல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நேற்று மதியம் கோடவுனின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. அருகில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேடசந்துார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அப்பகுதியில் இருந்தவர்களே தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அசம்பாவிதம், பொருட்கள் சேதம் தவிர்க்கப்பட்டது.
