ADDED : செப் 21, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, செப்.22-
வடமதுரை அருகே பிலாத்து பகுதி மாணவர்களை திண்டுக்கல் தனியார் பள்ளி தனது பஸ் மூலம் தினமும் அழைத்து செல்கிறது. மாணவர்கள் வீடு திரும்பும் மாலை நேரத்தில் தென்னம்பட்டி பிலாத்து ரோட்டில் போதையில் டூவீலரில் திரிந்த வாலிபரை ஹாரன் அடித்து பஸ் முந்திச்சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் பள்ளி பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டார். பஸ்சில் இருந்த மாணவர்கள் கலக்கமடைந்தனர். அதே பகுதியை சார்ந்த ஒரு கடை, காங்., பிரமுகர் வீட்டிற்கும் சென்று அந்த வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து வடமதுரை போலீசில் தனித்தனியே புகார்கள் தரப்பட்டு விசாரணை நடக்கிறது.
