
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி திண்டுக்கல் ரோடு தனியார் லாட்ஜ் அருகே சிவசாமி 55, என்பவரின் பழைய சாமான்கள் வாங்கி வைக்கும் குடோன் உள்ளது.
அதில் உள்ள அட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான குழு ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தது. பொருட்கள் சேதம் அடைந்தன.