தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தீத்தடுப்பு செயல்விளக்கம்

தீத்தடுப்பு செயல்விளக்கம்

தீத்தடுப்பு செயல்விளக்கம்


UPDATED : ஜூலை 06, 2026 10:25 PM

ADDED : ஜூலை 06, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 10:25 PM ADDED : ஜூலை 06, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:மாவட்ட தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.

உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீத்தடுப்பு குழு நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், ஜெயமாரி ஐயப்பன் (பயிற்சி) உட்பட தீயணைப்புத்துறை வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

அப்போது தீத்தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள், கட்டடங்களில் தீப்பிடித்தால் பாதுகாப்பாக தப்பிப்பது, தீயணைப்பான் பயன்பாடு, பேரிடர் கால முன் எச்சரிக்கை பணிகள், காஸ் சிலிண்டர் விபத்தில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us