ADDED : மார் 06, 2024 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் கோடை வெயிலில் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி நடந்து வருகிறது.
சித்தரேவு மலை ரோட்டில் தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி வருகின்றன. வாகனங்களில் செல்வோரால் எளிதில் தீ பற்றும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க வத்தலக்குண்டு ரேஞ்சர் ராம்குமார் தலைமையில் ரோட்டோர செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி தீ தடுப்பு பணி ,தீ தடுப்பு கோடுகளை அமைத்து பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.

