/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காய்கறி திருடியவர் மீது துப்பாக்கிச்சூடு
/
காய்கறி திருடியவர் மீது துப்பாக்கிச்சூடு
ADDED : ஆக 11, 2024 11:20 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தோட்டத்திற்குள் புகுந்து காய்கறிகளை திருடிய வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடையைச் சேர்ந்தவர் சவேரியார் 75. இவர் சிறுமலையில் தோட்டம் வைத்திருப்பதால் அங்கேயே தங்கியிருந்து விளை பொருட்களை பாதுகாத்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சிறுமலை தாழக்கடை பகுதி பழங்குடியினத்தைச் சேர்ந்த வெள்ளையன் 28, சவேரியாரின் தோட்டத்திற்குள் புகுந்து காய்கறிகளை திருட முயன்றார்.
அதை கவனித்த சவேரியார் நாட்டுத்துப்பாக்கியால் அவரை சுட்டார். இதில் வெள்ளையனுக்கு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் இதுதொடர்பாக நேற்று மதியம் சவேரியாரிடம் நாட்டுத்துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

