ADDED : ஏப் 25, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 7 பேர் தேசிய திறனாய்வு தேர்விலும், 22 பேர் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களது எண்ணிக்கை அடிப்படையில் தேசிய ஊரக தேர்வில் பழநி கல்வி மாவட்ட அளவில் முதலிடம், திண்டுக்கல் முதன்மை மாவட்ட அளவில் 3ம் இடம், மாநில ஊரக திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடமாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பயிற்சி தந்த ஆசிரியர்களை தாளாளர் பெருமாள், இயக்குனர்கள் அருள்மணி, ஹரீஷ் செந்தில், சுப்பம்மாள், தலைமை ஆசிரியர் ராமு பாராட்டினர்.

