ADDED : ஏப் 22, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே கோட்டையூர் ஊராட்சி சின்னையம்பட்டி கிராமத்தில் உள்ள வெட்டுக்குளத்தில் மீன் பிடி திருவிழா நடந்தது.
இதையொட்டி நத்தம், கோட்டையூர், சிறுகுடி, செந்துறை, சிங்கம்புணரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளை பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.
பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது.