ADDED : நவ 20, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பிள்ளையார் நத்தம் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு மேல்நிலைப்பள்ளி,கேம் சாஹிபா நகரம் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு தொடக்கப்பள்ளி,அசனாத்புரம் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு தொடக்கப்பள்ளிகளில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினவிழா,முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா,தேசிய ஒருமை பாட்டு நாள்,மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் தாளாளர் அப்துல் முத்தலீப் தலைமை வகித்தார். ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் சைக்கிள்களை வழங்கினார்.
பள்ளி தாளாளர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வர்ஷினி வரவேற்றார். பேகம்சாஹிநகரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமாமேரி பங்கேற்றார்.

